நறுவீ·தமிழருவிபுறநானூறு
382 / 398
புறநானூறு382

கேட்டொறும் நடுங்க ஏத்துவேன்!

ஒரு வரியைத் தொட்டு அதன் பொருளைப் பார்க்கலாம்

கடல் படை அடல் கொண்டி, மண் டுற்ற மலிர் நோன்றாள், தண் சோழ நாட்டுப் பொருநன், அலங்கு உளை அணி இவுளி நலங் கிள்ளி நசைப் பொருநரேம்; பிறர்ப் பாடிப் பெறல் வேண்டேம் அவற் பாடுதும், ‘அவன் தாள் வாழிய!’ என! நெய் குய்ய ஊன் நவின்ற பல்சோற்றான், இன் சுவைய நல் குரவின் பசித் துன்பின் நின் முன்நாள் விட்ட மூதறி சிறா அரும், யானும், ஏழ்மணி யங்கேள், அணிஉத்திக், கட்கேள்விக், சுவை நாவின் நிறன் உற்ற, அரா அப் போலும் வறன் ஒரீ இ, வழங்கு வாய்ப்ப, விடுமதி அத்தை, கடுமான் தோன்றல்! நினதே, முந்நீர் உடுத்த இவ் வியன் உலகு, அறிய; எனதே, கிடைக்காழ் அன்ன தெண்கண் மாக்கிணை கண்ணகத்து யாத்த நுண் அரிச் சிறுகோல் எறிதொறும் நுடங்கி யாங்கு, நின் பகைஞர் கேட்டொறும் நடுங்க, ஏத்துவென், வென்ற தேர், பிறர் வேத்தவை யானே.
வரி பொருள்
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை.
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை
முழுப் பொருள்
பாடியவர்
கோவூர் கிழார்.
புலவரின் குறிப்பு சரிபார்க்கப்பட்ட ஆதாரத்துடன் பின்னர் சேர்க்கப்படும்.
பாடல் விவரம்