நறுவீ·தமிழருவிபுறநானூறு
366 / 398
புறநானூறு366

மாயமோ அன்றே!

ஒரு வரியைத் தொட்டு அதன் பொருளைப் பார்க்கலாம்

விழுக்கடிப்பு அறைந்த முழுக்குரல் முரசம் ஒழுக்குடை மருங்கின் ஒருமொழித் தாக, அரவுஎறி உருமின் உரறுபு சிலைப்ப, ஒருதா மாகிய பெருமை யோரும், தம்புகழ் நிறீஇச் சென்றுமாய்ந் தனரே; அதனால், அறிவோன் மகனே! மறவோர் செம்மால்! . . . . . . . . . . உரைப்பக் கேண்மதி; நின் ஊற்றம் பிறர் அறியாது, பிறர் கூறிய மொழி தெரியா, ஞாயிற்று எல்லை ஆள்வினைக்கு உதவி, இரவின் எல்லை வருவது நாடி, உரை . . . . . . . . . . . உழவொழி பெரும்பகடு அழிதின் றாங்குச், செங்கண் மகளிரொடு சிறுதுளி அளைஇ, அங்கள் தேறல் ஆங்கலத்து உகுப்ப, கெடல் அருந் திருவ . . . . . . . மடை வேண்டுநர்க்கு இடை அருகாது, அவிழ் வேண்டுநர்க்கு இடை அருளி விடை வீழ்த்துச் சூடு கிழிப்ப, நீர்நீலை பெருத்த வார்மணல் அடைகரைக், காவு தோறும் . . . . . . . . மடங்கல் உண்மை மாயமோ அன்றே.
வரி பொருள்
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை.
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை
முழுப் பொருள்
பாடியவர்
கோதமனார்.
புலவரின் குறிப்பு சரிபார்க்கப்பட்ட ஆதாரத்துடன் பின்னர் சேர்க்கப்படும்.
பாடல் விவரம்