களரி பரந்து, கள்ளி போகிப்,
பகலும் கூஉம் கூகையடு, பிறழ்பல்,
ஈம விளக்கின், பேஎய் மகளிரொடு
அஞ்சுவந் தன்று, இம் மஞ்சுபடு முதுகாடு;
நெஞ்சமர் காதலர் அழுத கண்ணீர்
என்புபடு சுடலை வெண்ணீறு அவிப்ப,
எல்லார் புறனும் தான்கண்டு, உலகத்து
மன்பதைக் கெல்லாம் தானாய்த்,
தன்புறம் காண்போர்க் காண்புஅறி யாதே.
வரி பொருள்
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை.
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை