நறுவீ·தமிழருவிபுறநானூறு
345 / 398
மகட்பாற் காஞ்சி (345

பன்னல் வேலிப் பணை நல்லூர்!

ஒரு வரியைத் தொட்டு அதன் பொருளைப் பார்க்கலாம்

களிறு அணைப்பக் கலங்கின, காஅ; தேர்ஓடத் துகள் கெழுமின, தெருவு; மா மறுகலின் மயக்குற்றன, வழி; கலங் கழாஅலின், துறை கலக்குற்றன; தெறல் மறவர் இறை கூர்தலின், பொறை மலிந்து நிலன் நெளிய, வந்தோர் பலரே, வம்ப வேந்தர், பிடிஉயிர்ப் பன்ன கைகவர் இரும்பின் ஓவுறழ் இரும்புறம் காவல் கண்ணிக், கருங்கண் கொண்ட நெருங்கல் வெம்முலை, மையல் நோக்கின், தையலை நயந்தோர் அளியர் தாமே; இவள் தன்னை மாரே செல்வம் வேண்டார், செருப்புகல் வேண்டி, ‘நிரல்அல் லோர்க்குத் தரலோ இல்’ எனக்; கழிப்பிணிப் பலகையர், கதுவாய் வாளர், குழாஅங் கொண்ட குருதிஅம் புலவொடு கழாஅத் தலையர் கருங்கடை நெடுவேல் இன்ன மறவர்த் தாயினும், அன்னோ ! என்னா வதுகொல் தானே- பன்னல் வேலிஇப் பணைநல் லூரே!
வரி பொருள்
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை.
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை
முழுப் பொருள்
பாடியவர்
அடைநெடுங் கல்வியார்
புலவரின் குறிப்பு சரிபார்க்கப்பட்ட ஆதாரத்துடன் பின்னர் சேர்க்கப்படும்.
பாடல் விவரம்