நறுவீ·தமிழருவிபுறநானூறு
342 / 398
மகட்பாற் காஞ்சி342

வாள்தக உழக்கும் மாட்சியர்!

ஒரு வரியைத் தொட்டு அதன் பொருளைப் பார்க்கலாம்

‘கானக் காக்கைக் கலிச்சிறகு ஏய்க்கும் மயிலைக் கண்ணிப், பெருந்தோட் குறுமகள், ஏனோர் மகள்கொல் இவள்?’ என விதுப்புற்று, என்னொடு வினவும் வென்வேல் நெடுந்தகை; திருநயத் தக்க பண்பின் இவள் நலனே பொருநர்க்கு அல்லது, பிறர்க்கு ஆகாதே; பைங்கால் கொக்கின் பகுவாய்ப் பிள்ளை மென்சேற்று அடைகரை மேய்ந்துஉண் டதற்பின், ஆரல் ஈன்ற ஐயவி முட்டை, கூர்நல் இறவின் பிள்ளையடு பெறூஉம், தன்பணைக் கிழவன்இவள் தந்தையும்; வேந்தரும் பெறாஅ மையின் பேரமர் செய்தலின், கழிபிணம் பிறங்கு போர்பு அழிகளிறு எருதா, வாள்தக வைகலும் உழக்கும் மாட்சி யவர் இவள் தன்னை மாரே.
வரி பொருள்
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை.
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை
முழுப் பொருள்⌃
பாடியவர்⌄
அரிசில் கிழார்
புலவரின் குறிப்பு சரிபார்க்கப்பட்ட ஆதாரத்துடன் பின்னர் சேர்க்கப்படும்.
பாடல் விவரம்⌄