நறுவீ·தமிழருவிபுறநானூறு
341 / 398
மகட்பாற் காஞ்சி341

இழப்பது கொல்லோ பெருங்கவின்!

ஒரு வரியைத் தொட்டு அதன் பொருளைப் பார்க்கலாம்

வேந்துகுறை யுறவுங் கொடாஅன், ஏந்துகோட்டு அம்பூந் தொடலை அணித்தழை அல்குல், செம்பொறிச் சிலம்பின் இளையோள் தந்தை, எழுவிட்டு அமைத்த திண்நிலைக் கதவின் அனரமண் இஞ்சி நாட்கொடி நுடங்கும் .. .. .. . .. .. ... .. .. .. .. புலிக்கணத் தன்ன கடுங்கண் சுற்றமொடு, மாற்றம் மாறான், மறலிய சினத்தன், ‘பூக்கோள்’ என ஏஎய்க், கயம்புக் கனனே; விளங்குஇழைப் பொலிந்த வேளா மெல்லியல், சுணங்கணி வனமுலை, அவளடு நாளை மணம்புகு வைகல் ஆகுதல் ஒன்றோ- ஆரமர் உழக்கிய மறம்கிளர் முன்பின், நீள்இலை எ·கம் மறுத்த உடம்பொடு வாரா உலகம் புகுதல் ஒன்று- எனப் படைதொட் டனனே, குருசில்; ஆயிடைக் களிறுபொரக் கலங்கிய தண்கயம் போலப், பெருங்கவின் இழப்பது கொல்லோ, மென்புனல் வைப்பின்இத் தண்பணை ஊரே!
வரி பொருள்
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை.
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை
முழுப் பொருள்
பாடியவர்
பரணர்
புலவரின் குறிப்பு சரிபார்க்கப்பட்ட ஆதாரத்துடன் பின்னர் சேர்க்கப்படும்.
பாடல் விவரம்