வென்வேல் .. .. .. .. .. .. நது
முன்றில் கிடந்த பெருங்களி யாளற்கு
அதளுண் டாயினும், பாய்உண்டு ஆயினும்,
யாதுண்டு ஆயினும், கொடுமின் வல்லே;
வரி பொருள்
வெற்றிவேலை உடைய வீரன் களிப்புற்று முற்றத்தில் வந்து கிடக்கிறான். அவன் படுப்பதற்கு மான்தோலோ பாயோ அல்லது கிடைக்கக்கூடிய வேறு எதுவோ இருந்தால் உடனே கொடுங்கள் என்று பாணன் கூறுகிறான்.
நறுவீ வாசிப்பு விளக்கம் · மறுஆய்வுக்கு உட்பட்டது