நறுவீ·தமிழருவிபுறநானூறு
316 / 398
வல்லாண் முல்லை316

சீறியாழ் பனையம்!

ஒரு வரியைத் தொட்டு அதன் பொருளைப் பார்க்கலாம்

கள்ளின் வாழ்த்திக், கள்ளின் வாழ்த்திக், காட்டொடு மிடைந்த சீயா முன்றில், நாட்செருக்கு அனந்தர்த் துஞ்சு வோனே! அவன் எம் இறைவன்; யாம்அவன் பாணர்; நெருநை வந்த விருந்திற்கு மற்றுத் தன் இரும்புடைப் பழவாள் வைத்தனன்; இன்றுஇக் கருங்கோட்டுச் சீறியாழ் பணையம்; இதுகொண்டு ஈவது இலாளன் என்னாது, நீயும்; வள்ளி மருங்குல் வயங்குஇழை அணியக், கள்ளுடைக் கலத்தேம் யாம்மகிழ் தூங்கச், சென்று வாய் சிவந்துமேல் வருக_ சிறுகண் யானை வேந்து விழுமுறவே.
வரி பொருள்
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை.
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை
முழுப் பொருள்
பாடியவர்
மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார்
புலவரின் குறிப்பு சரிபார்க்கப்பட்ட ஆதாரத்துடன் பின்னர் சேர்க்கப்படும்.
பாடல் விவரம்