நிலம்பிறக் கிடுவது போலக் குளம்பு குடையூஉ
உள்ளம் அழிக்கும் கொட்பின் மான்மேல்
எள்ளுநர்ச் செகுக்கும் காளை கூர்த்த
வெந்திறல் எ·கம் நெஞ்சுவடு விளைப்ப
ஆட்டிக் காணிய வருமே;
வரி பொருள்
நிலமே பின்னோக்கிச் செல்லுமாறுபோல் குளம்பை ஊன்றி விரைந்து பாயும் குதிரைமேல், தன்னை இகழும் பகைவரைக் கொல்லும் காளைபோன்ற வீரன் கூரிய வலிமைமிக்க வேலைச் சுழற்றி எதிரிகளின் மார்பில் புண் உண்டாக்கிக்கொண்டு, என்னுடன் போரிட்டு வெற்றி காண வருகிறான்.
நறுவீ வாசிப்பு விளக்கம் · மறுஆய்வுக்கு உட்பட்டது