நறுவீ·தமிழருவிபுறநானூறு
301 / 398
தானை மறம்301

அறிந்தோர் யார்?

ஒரு வரியைத் தொட்டு அதன் பொருளைப் பார்க்கலாம்

பல் சான்றீரே ! பல் சான்றீரே! குமரி மகளிர் கூந்தல் புரைய, அமரின் இட்ட அருமுள் வேலிக் கல்லென் பாசறைப் பல்சான் றீரே! முரசுமுழங்கு தானைநும் அரசும் ஓம்புமின்; ஒளிறு ஏந்து ,மருப்பின்நும் களிறும் போற்றுமின்! எனைநாள் தங்கும்நும் போரே, அனைநாள் எறியர் எறிதல் யாவணது? எறிந்தோர் எதிர்சென்று எறிதலும் செல்லான்; அதனால் அறிந்தோர் யார், அவன் கண்ணிய பொருளே! ‘பலம்’ என்று இகழ்தல் ஓம்புமின்! உதுக்காண் நிலன்அளப் பன்ன நில்லாக் குறுநெறி, வண்பரிப் புரவிப் பண்புபா ராட்டி, எல்லிடைப் படர்தந் தோனே ; கல்லென வேந்தூர் யானைக்கு அல்லது, ஏந்துவன் போலான், தன் இலங்கிலை வேலே!
வரி பொருள்
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை.
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை
முழுப் பொருள்
பாடியவர்
ஆவூர் மூலங்கிழார்
புலவரின் குறிப்பு சரிபார்க்கப்பட்ட ஆதாரத்துடன் பின்னர் சேர்க்கப்படும்.
பாடல் விவரம்