துடி எறியும் புலைய!
எறிகோல் கொள்ளும் இழிசின!
கால மாரியின் அம்பு தைப்பினும்,
வயல் கெண்டையின் வேல் பிறழினும்,
பொலம்புனை ஓடை அண்ணல் யானை
இலங்குவாள் மருப்பின் நுதிமடுத்து ஊன்றினும்,
ஓடல் செல்லாப் பீடுடை யாளர்
வரி பொருள்
துடிப்பறை கொட்டுபவனையும் பறையை அடிக்கும் கோல் ஏந்தியவனையும் அழைத்து, மழைத்தாரைபோல் அம்புகள் தைத்தாலும், கெண்டைமீன்போல் வேல்கள் பாய்ந்தாலும், பொன் முகப்பட்டம் அணிந்த யானை தனது கூரிய கொம்பால் குத்தினாலும் புறங்கொடுத்து ஓடாத மறப்பெருமையுடைய வீரர்களைப் புலவர் எடுத்துரைக்கிறார்.
நறுவீ வாசிப்பு விளக்கம் · மறுஆய்வுக்கு உட்பட்டது