நறுவீ·தமிழருவிபுறநானூறு
280 / 398
ஆந்தப் பையுள்280

வழிநினைந்து இருத்தல் அரிதே!

ஒரு வரியைத் தொட்டு அதன் பொருளைப் பார்க்கலாம்

என்னை மார்பிற் புண்ணும் வெய்ய நடுநாள் வந்து தும்பியும் துவைக்கும்; நெடுநகர் வரைப்பின் விளக்கும் நில்லா; துஞ்சாக் கண்ணே துயிலும் வேட்கும்; அஞ்சுவரு குராஅல் குரலும் தூற்றும்; நெல்நீர் எறிந்து விரிச்சி ஓர்க்கும் செம்முது பெண்டின் சொல்லும் நிரம்பா; துடிய! பாண ! பாடுவல் விறலி! என்ஆ குவிர்கொல் ? அளியிர்; நுமக்கும் இவண் உறை வாழ்க்கையோ, அரிதே ! யானும் மண்ணுறு மழித்தலைத் , தெண்ணீர் வாரத், தொன்றுதாம் உடுத்த அம்பகைத் தெரியல் சிறுவெள் ஆம்பல் அல்லி உண்ணும் கழிகல மகளிர் போல, வழிநினைந்து இருத்தல், அதனினும் அரிதே!
வரி பொருள்
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை.
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை
முழுப் பொருள்
பாடியவர்
மாறோக்கத்து நப்பசலையார்
புலவரின் குறிப்பு சரிபார்க்கப்பட்ட ஆதாரத்துடன் பின்னர் சேர்க்கப்படும்.
பாடல் விவரம்