மணிதுணர்ந் தன்ன மாக்குரல் நொச்சி!
போதுவிரி பன்மர னுள்ளும் சிறந்த
காதல் நன்மரம் நீ; நிழற் றிசினே!
கடியுடை வியன்நகர்க் காண்வரப் பொலிந்த
தொடியுடை மகளிர் அல்குலும் கிடத்தி;
வரி பொருள்
கரிய கொத்துகள் மணித்தொகுதி போலத் தோன்றும் நொச்சியே, மலர்ந்த பல மரங்களுள் நீ சிறப்பாக விரும்பத்தக்க மரம். காவல் மிக்க அகன்ற நகரில் அழகுற விளங்கும் வளையணிந்த மகளிரின் அல்குலில் தழையாக அணியப்படும் பெருமையும் உனக்கு உண்டு.
நறுவீ வாசிப்பு விளக்கம் · மறுஆய்வுக்கு உட்பட்டது