ஊர்நனி இறந்த பார்முதிர் பறந்தலை,
ஓங்குநிலை வேங்கை ஒள்ளிணர் நறுவீப்
போந்தை அம் தோட்டின் புனைந்தனர் தொடுத்துப்,
பல்ஆன் கோவலர் படலை சூட்டக்,
கல்ஆ யினையே-கடுமான் தோன்றல்!
வான்ஏறு புரையும்நின் தாள்நிழல் வாழ்க்கைப்
பரிசிலர் செல்வம் அன்றியும் ! விரிதார்க்
கடும்பகட்டு யானை வேந்தர்
ஒடுங்க வென்றியும், நின்னொடு செலவே.
வரி பொருள்
பகைவரிடமிருந்து நிரைகளை மீட்ட போரில் வீழ்ந்த வீரனுக்குக் கோவலர் மலர்மாலை சூட்டி நடுகல் நாட்டினர். அவனது நிழலில் வாழ்ந்த பரிசிலரின் செல்வம் மட்டுமல்லாது, அரசர்களுக்கு வெற்றியை ஈட்டிய அவனது வீரமும் அவனோடு மறைந்தது என்று புலவர் இரங்குகிறார்.
நறுவீ வாசிப்பு விளக்கம் · மறுஆய்வுக்கு உட்பட்டது