பெருங்களிற்று அடியின் தோன்றும் ஒருகண்
இரும்பறை இரவல! சேறி ஆயின்,
தொழாதனை கழிதல் ஓம்புமதி; வழாது,
வண்டுமேம் படூஉம், இவ் வறநிலை யாறே-
வரி பொருள்
பெரிய களிற்றின் அடிபோலத் தோன்றும் ஒருகண் பெரிய பறையை உடைய இரவலனே! நீ இவ்வழியே சென்றால், அங்குள்ள நடுகல்லை வணங்காமல் கடந்து செல்லாதே. அதை வழிபட்டால் வறண்டு கிடக்கும் இவ்வழி வளம்பெற்று வண்டுகள் வாழும் நிலையாகும் எனப் புலவர் அறிவுறுத்துகிறார்.
நறுவீ வாசிப்பு விளக்கம் · மறுஆய்வுக்கு உட்பட்டது