முட்கால் காரை முதுபழன் ஏய்ப்பத்
தெறிப்ப விளைந்த தீங்கந் தாரம்
நிறுத்த ஆயம் தலைச்சென்று உண்டு,
பச்சூன் தின்று, பைந்நிணப் பெருத்த
எச்சில் ஈர்ங்கை விற்புறம் திமிரிப்,
புலம்புக் கனனே, புல்அணற் காளை,
ஒருமுறை உண்ணா அளவைப், பெருநிரை
ஊர்ப்புறம் நிறையத் தருகுவன் ; யார்க்கும்
தொடுதல் ஓம்புமதி முதுகட் சாடி;
ஆதரக் கழுமிய துகளன்,
காய்தலும் உண்டு, அக் கள்வெய் யோனே.
வரி பொருள்
கள்ளுண்டு பச்சூன் தின்ற வீரன் மீண்டும் நிரை கவரச் சென்றிருக்கிறான்; ஒருமுறை உண்பதற்குள் பெருநிரையைக் கொண்டு வரக்கூடிய அவனுக்காக வைத்துள்ள பழைய கள்ளுச் சாடியை யாரும் தொடாதபடி காக்குமாறு கூறப்படுகிறது.
நறுவீ வாசிப்பு விளக்கம் · மறுஆய்வுக்கு உட்பட்டது