கலம்செய் கோவே : கலம்செய் கோவே!
அச்சுடைச் சாகாட்டு ஆரம் பொருந்திய
சிறுவெண் பல்லி போலத் தன்னொடு
சுரம்பல வந்த எமக்கும் அருளி,
வரி பொருள்
ஊர்க்குயவனை மீண்டும் அழைக்கும் தலைவி, வண்டிச் சக்கரத்தின் ஆரத்தைப் பற்றிக்கொண்டு அதனுடன் வரும் சிறிய வெண்பல்லியைப் போலத் தானும் தன் கணவனைப் பற்றியே பல சுரவழிகளைக் கடந்து வந்ததாகக் கூறுகிறாள்.
நறுவீ வாசிப்பு விளக்கம் · மறுஆய்வுக்கு உட்பட்டது