என்திறத்து அவலம் கொள்ளல், இனியே;
வல்வார் கண்ணி இளையர் திளைப்ப,
‘நாகாஅல்’ என வந்த மாறே, எழாநெல்
பைங்கழை பொதிகளைந்து அன்ன விளர்ப்பின்,
வளைஇல், வறுங்கை ஓச்சிக்,
கிளையுள்’ஒய்வலோ? கூறுநின் உரையே!
வரி பொருள்
தன் கணவன் இறந்தபின் துயருற்ற மனைவி, இனி தன்னைச் சார்ந்தோரிடையே எவ்வாறு வாழ்வேன் என்று தன் நெஞ்சையே நோக்கிக் கேட்பதுபோலப் புலம்புகிறாள்.
நறுவீ வாசிப்பு விளக்கம் · மறுஆய்வுக்கு உட்பட்டது