யானை தந்த முளிமர விறகின்
கானவர் பொத்திய ஞெலிதீ விளக்கத்து;
மடமான் பெருநிரை வைகுதுயில் எடுப்பி,
மந்தி சீக்கும் அணங்குடை முன்றிலில்,
நீர்வார் கூந்தல் இரும்புறம் தாழப்,
பேரஞர்க் கண்ணள், பெருங்காடு நோக்கித்,
தெருமரும் அம்ம தானே- தன் கொழுநன்
முழுவுகண் துயிலாக் கடியுடை வியனகர்ச்
சிறுநனி தமியள் ஆயினும்,
இன்னுயிர் நடுங்குந்தன் இளமைபுறங் கொடுத்தே!
வரி பொருள்
கணவனைச் சிறிது நேரம்கூடப் பிரிய இயலாத இளமகள், இப்போது நீர் சொட்டும் கூந்தலுடன் பெருந்துயரக் கண்களால் புறங்காட்டை நோக்கித் தீப்புகச் செல்கிறாள் எனப் புலவர் கண்ட காட்சியை இரங்குகிறார்.
நறுவீ வாசிப்பு விளக்கம் · மறுஆய்வுக்கு உட்பட்டது