யங்குப் பெரிது ஆயினும், நோய்அளவு எனைத்தே,
உயிர்செகுக் கல்லா மதுகைத்து அன்மையின்?
கள்ளி போகிய களரியம் பறந்தலை
வெள்ளிடைப் பொத்திய விளைவிறகு ஈமத்து,
ஒள்ளழற் பள்ளிப் பாயல் சேர்த்தி,
ஞாங்கர் மாய்ந்தனள், மடந்தை ;
இன்னும் வாழ்வல் ; என்இதன் பண்பே!
வரி பொருள்
தன் காதலி இறந்து ஈமத்தீயில் மறைந்ததை நேரில் கண்டும் தன் உயிர் நீங்காமல் இருப்பதை எண்ணி, இந்தத் துயரின் இயல்பு என்ன என்று மாக்கோதை தன்னையே வினவுகிறான்.
நறுவீ வாசிப்பு விளக்கம் · மறுஆய்வுக்கு உட்பட்டது