இனிநினைந்து இரக்கம் ஆகின்று; திணிமணல்
செய்வுறு பாவைக்குக் கொய்பூத் தைஇத்,
தண்கயம் ஆடும் மகளிரொடு கைபிணைந்து,
தழுவுவழித் தழீஇத், தூங்குவழித் தூங்கி,
மறைஎனல் அறியா மாயம்இல் ஆயமொடு
உயர்சினை மருதத் துறையுறத் தாழ்ந்து,
வரி பொருள்
கடந்த இளமை நினைவுக்கு வரும்போது இப்போது இரக்கம் தோன்றுகிறது. மணற்பாவைக்கு மலர் சூட்டி, குளிர்ந்த குளத்தில் மகளிருடன் கைகோர்த்து விளையாடி, வஞ்சனையற்ற தோழர் கூட்டத்துடன் மருதமரத் துறையில் மகிழ்ந்த இளமை நாட்களைப் புலவர் நினைவுகூர்கிறார்.
நறுவீ வாசிப்பு விளக்கம் · மறுஆய்வுக்கு உட்பட்டது