இளையோர் சூடார் ; வளையோர் கொய்யார் ;
நல்யாழ் மருப்பின் மெல்ல வாங்கிப்,
பாணன் சூடான் ; பாடினி அணியாள் ;
ஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்த
வல்வேற் சாத்தன் மாய்ந்த பின்றை
முல்லையும் பூத்தியோ, ஒல்லையூர் நாட்டே?
வரி பொருள்
வல்வேல் சாத்தன் மறைந்தபின் இளையரும் மகளிரும் பாணரும் பாடினியும் முல்லையை அணியாத துயர்நிலையில், பயனின்றி நீ மட்டும் ஏன் பூத்தாய் என்று முல்லையையே நோக்கிப் புலவர் இரங்குகிறார்.
நறுவீ வாசிப்பு விளக்கம் · மறுஆய்வுக்கு உட்பட்டது