‘திண்தேர் இரவலர்க்கு, ஈத்த, தண்தார்
அண்டிரன் வரூஉம்’ என்ன, ஒண்தொடி
வச்சிரத் தடக்கை நெடியோன் கோயிலுள்,
போர்ப்புறு முரசும் கறங்க,
ஆர்ப்புஎழுந் தன்றால், விசும்பி னானே.
வரி பொருள்
வலிய தேர்களை இரவலர்க்கு வழங்கிய குளிர்ந்த மாலையணிந்த ஆய் அண்டிரன் தேவருலகிற்கு வருகிறான் என்று, வச்சிராயுதம் ஏந்திய இந்திரனது கோயிலில் வரவேற்பு முரசு முழங்குவது போல வானமே ஆரவாரம் செய்தது எனப் புலவர் கற்பனை செய்கிறார்.
நறுவீ வாசிப்பு விளக்கம் · மறுஆய்வுக்கு உட்பட்டது