சிறியகட் பெறினே, எமக்கீயும்; மன்னே!
பெரிய கட் பெறினே,
யாம் பாடத், தான்மகிழ்ந்து உண்ணும்; மன்னே!
சிறுசோற் றானும் நனிபல கலத்தன்; மன்னே!
பெருஞ்சோற்றானும் நனிபல கலத்தன்; மன்னே!
வரி பொருள்
சிறிதளவு கள் கிடைத்தால் அதனைப் புலவர்களுக்கே அளிப்பான்; அதிகமாகக் கிடைத்தால் அவர்கள் பாடி மகிழ்ந்தபின் தானும் சேர்ந்து உண்ணுவான். சிறுசோறு என்றாலும் பெருஞ்சோறு என்றாலும் பலரோடு பகிர்ந்து உண்ணும் வள்ளன்மை உடையவன் என அதியமானின் கொடைநலம் நினைவுகொள்ளப்படுகிறது.
நறுவீ வாசிப்பு விளக்கம் · மறுஆய்வுக்கு உட்பட்டது