நோகோ யானே, தேய்கமா காலை!
பிடி அடி அன்ன சிறுவழி மெழுகித்
தன் அமர் காதலி புன் மேல் வைத்த
இன் சிறு பிண்டம் யாங்கு உண்டனன் கொல்,
உலகு புகத் திறந்த வாயில்
பலரோடு உண்டல் மரீஇயோனே?
வரி பொருள்
உலகமெல்லாம் நுழையத் திறந்த வீட்டில் பலரோடு உண்பதையே இயல்பாகக் கொண்ட எவ்வி, அவன் மறைவுக்குப் பின் காதலி சிறிய இடத்தை மெழுகி புல்மேல் வைத்த சிறு பிண்டத்தை எவ்வாறு ஏற்றுக்கொண்டிருப்பான் என்று புலவர் இரங்குகிறார்.
நறுவீ வாசிப்பு விளக்கம் · மறுஆய்வுக்கு உட்பட்டது