எறி புனக் குறவன் குறையல் அன்ன
கரி புற விறகின் ஈம ஒள் அழல்
குறுகினும் குறுகுக, குறுகாது சென்று
விசும்புற நீளினும் நீள்க, பசுங்கதிர்த்
திங்கள் அன்ன வெண்குடை
ஒண் ஞாயிறு அன்னோன் புகழ் மாயலவே.
வரி பொருள்
அதியமானின் உடலை எரிக்கும் ஈமத்தீ அவனை அணுகினாலும் அணுகட்டும்; வானளவு உயர்ந்தாலும் உயரட்டும். உடல் அழிந்தாலும் திங்களை ஒத்த வெண்குடையையும் ஒளிரும் ஞாயிற்றைப் போன்ற பெருமையையும் உடைய அவனது புகழ் அழியாது என்று ஔவையார் கூறுகிறார்.
நறுவீ வாசிப்பு விளக்கம் · மறுஆய்வுக்கு உட்பட்டது