நனிபே தையே, நயனில் கூற்றம்!
விரகுஇன் மையின் வித்துஅட்டு, உண்டனை
இன்னுங் காண்குவை, நன்வாய் ஆகுதல்;
வரி பொருள்
இரக்கமும் நியாயமும் இல்லாத கூற்றமே, எதிர்கால விளைச்சலுக்குரிய விதையையே உண்ட பேதை உழவனைப் போல நீ நடந்தாய்; இதன் தீய விளைவை இனி காண்பாய் எனக் கவிஞர் கூற்றத்தைச் சாடுகிறார்.
நறுவீ வாசிப்பு விளக்கம் · மறுஆய்வுக்கு உட்பட்டது