`நுங்கோ யார்?` வினவின், எங்கோக்
களமர்க்கு அரித்த விளையல் வெங்கள்
யாமைப் புழுக்கின் காமம் வீடஆரா,
ஆரற் கொழுஞ்சூடு அங்கவுள் அடாஅ,
வரி பொருள்
‘உங்கள் அரசன் யார்?’ என்று கேட்டால், எங்கள் அரசன் யார் என்பதைச் சொல்கிறேன் எனப் பிசிராந்தையார் தொடங்குகிறார். வயல்வெளிப் பணியாளர்கள் வடிகட்டிய முதிர்ந்த கள்ளை ஆமை இறைச்சியுடன் விருப்பம் தீர உண்டு, ஆரல் மீனின் கொழுத்த சூட்டையும் உண்ணும் வளமிக்க நாட்டை முதலில் வருணிக்கிறார்.
நறுவீ வாசிப்பு விளக்கம் · மறுஆய்வுக்கு உட்பட்டது