எழுஇனி, நெஞ்சம்! செல்கம்; யாரோ,
பருகு அன்ன வேட்கை இல்அழி,
அருகிற் கண்டும் அறியார் போல,
அகம்நக வாரா முகன்அழி பரிசில்
தாள்இலாளர் வேளார் அல்லர்?
வரி பொருள்
நெஞ்சே, எழுந்து இனி வேறிடத்துச் செல்வோம். நம்மைக் கண்டும் அறியாதவர் போல இருந்து, உள்ளம் மகிழ வரவேற்காமல் முகமலர்ச்சியின்றிப் பரிசளிப்பவரின் கொடையை முயற்சியும் மானமும் உடையவர்கள் விரும்பமாட்டார்கள் என்று புலவர் கூறுகிறார்.
நறுவீ வாசிப்பு விளக்கம் · மறுஆய்வுக்கு உட்பட்டது