`இவர் யார்?` என்குவை ஆயின், இவரே,
ஊருடன் இரவலர்க்கு அருளித் ,தேருடன்
முல்லைக்கு ஈத்த செல்லா நல்லிசை,
படுமணி யானைப்,பறம்பின் கோமான்
நெடுமாப் பாரி மகளிர்;
வரி பொருள்
‘இவர்கள் யார்?’ என்று கேட்பாயானால், தன் ஊரையே இரவலர்க்கு வழங்கியதும் முல்லைக்குத் தேரை ஈந்ததும் போன்ற அழியாத கொடைப்புகழுடைய பறம்பின் தலைவன் பாரியின் மகளிர் இவர்கள் என்று கபிலர் அறிமுகப்படுத்துகிறார்.
நறுவீ வாசிப்பு விளக்கம் · மறுஆய்வுக்கு உட்பட்டது