இன்று செலினுந் தருமே; சிறுவரை
நின்று செலினுந் தருமே ; பின்னும்,
‘முன்னே தந்தனென்’ என்னாது, துன்னி
வைகலும் செலினும், பொய்யலன் ஆகி,
யாம்வேண்டி யாங்குஎம் வறுங்கலம் நிறைப்போன்;
வரி பொருள்
இன்று சென்றாலும், சில நாள் கழித்துச் சென்றாலும், நாள்தோறும் சென்றாலும் ‘முன்னே கொடுத்தேன்’ என்று சொல்லாமல், தாம் வேண்டியபடியே வறுமைக் கலத்தை நிரப்புவான் பிட்டங்கொற்றன் என்று அவன் தொடர்ச்சியான கொடைச் சிறப்பை புலவர் கூறுகிறார்.
நறுவீ வாசிப்பு விளக்கம் · மறுஆய்வுக்கு உட்பட்டது