நீண்டொலி அழுவம் குறைய முகந்துகொண்டு,
ஈண்டுசெலல் கொண்மூ வேண்டுவயின் குழீஇப்
பெருமலை யன்ன தோன்றுதல், சூன்முதிர்பு,
உரும்உரறு கருவியடு, பெயல்கடன் இறுத்து,
வள்மலை மாறிய என்றூழ்க் காலை,
மன்பதை யெல்லாம் சென்றுணர், கங்கைக்
கரைபொரு மலிநீர் நிறைந்து தோன்றியாங்கு,
எமக்கும் பிறர்க்கும் செம்மலை யாகலின்,
வரி பொருள்
கடலிலிருந்து நீரை முகந்து திரண்டு, இடியுடன் மழையைப் பொழியும் மேகங்கள் கோடையில் நீங்கியபோது உயிர்கள் அனைத்தும் நாடிச் செல்லும் பெருவெள்ளக் கங்கைபோல், குமணன் தமக்கும் பிறர்க்கும் ஆதரவான தலைவனாக விளங்குகிறான் என்று புலவர் புகழ்கிறார்.
நறுவீ வாசிப்பு விளக்கம் · மறுஆய்வுக்கு உட்பட்டது