`வாழும் நாளடு யாண்டுபல உண்மையின்,
தீர்தல்செல் லாது, என் உயிர்` எனப் பலபுலந்து,
கோல்கால் ஆகக் குறும்பல ஒதுங்கி,
நூல்விரித் தன்ன கதுப்பினள், கண் துயின்று,
முன்றிற் போகா முதுர்வினள் யாயும்;
வரி பொருள்
பல ஆண்டுகள் வாழ்ந்தும் உயிர் இன்னும் நீங்கவில்லை என்று வருந்தும் முதிய தாய், கோலைக் காலாகக் கொண்டு சிறுசிறு அடிகள் வைத்து நடக்கிறாள்; நூல் விரித்ததுபோல் நரைத்த கூந்தலும் மங்கிய கண்களும் உடைய அவள் முற்றத்திற்குக்கூட செல்ல முடியாத முதுமையில் இருக்கிறாள்.
நறுவீ வாசிப்பு விளக்கம் · மறுஆய்வுக்கு உட்பட்டது