முரசுகடிப்பு இகுப்பவும், வால்வளை துவைப்பவும்,
அரசுடன் பொருத அண்ணல் நெடுவரைக்,
கறங்குவெள் அருவி கல் அலைத்து ஒழுகும்
பறம்பின் கோமான் பாரியும்; பிறங்கு மிசைக்
கொல்லி ஆண்ட வல்வில் ஓரியும்;
காரி ஊர்ந்து பேரமர்க் கடந்த,
மாரி ஈகை, மறப்போர் மலையனும்;
ஊராது ஏந்திய குதிரைக், கூர்வேல்,
கூவிளங் கண்ணிக், கொடும்பூண், எழினியும்;
வரி பொருள்
முரசும் சங்கும் முழங்க அரசர்களுடன் போரிட்ட பறம்பின் பாரி, கொல்லியை ஆண்ட வல்வில் ஓரி, காரி என்னும் குதிரையில் சென்று பெரும் போர்களை வென்ற மழைபோன்ற கொடையுடைய மலையமான், கூரிய வேலும் அணிகளும் உடைய எழினி ஆகிய வள்ளல்களைப் புலவர் நினைவுகூர்கிறார்.
நறுவீ வாசிப்பு விளக்கம் · மறுஆய்வுக்கு உட்பட்டது