அன்ன வாக; நின் அருங்கல வெறுக்கை
அவை பெறல் வேண்டேம்; அடுபோர்ப் பேக!
சீறியாழ் செவ்வழி பண்ணி, நின் வன்புல
நன்னாடு பாட, என்னை நயந்து
பரிசில் நல்குவை யாயின், குரிசில் !
வரி பொருள்
பேகன் தர விரும்பும் அரிய அணிகலன்களையும் செல்வத்தையும் தாம் வேண்டவில்லை; தம் பாடலுக்குப் பரிசு தர விரும்பினால் வேறொன்றையே கேட்பதாக அரிசில் கிழார் கூறுகிறார்.
நறுவீ வாசிப்பு விளக்கம் · மறுஆய்வுக்கு உட்பட்டது