மன்றப் பலவின் மாச்சினை மந்தி
இரவலர் நாற்றிய விசிகூடு முழவின்
பாடின் தெண்கண், கனி செத்து, அடிப்பின்,
அன்னச் சேவல் மாறு எழுந்து ஆலும்,
வரி பொருள்
ஊர்ப்பொதுவிலுள்ள பலாமரத்தின் பெரிய கிளையில் வாழும் மந்தி, இரவலர்கள் தொங்கவிட்ட முழவின் தெளிந்த கண்ணைப் பலாப்பழம் என்று எண்ணித் தட்டுகிறது; அதற்கு எதிரொலிபோல் அன்னச் சேவல் எழுந்து ஒலிக்கிறது.
நறுவீ வாசிப்பு விளக்கம் · மறுஆய்வுக்கு உட்பட்டது