மைம் மீன் புகையினும், தூமம் தோன்றினும்,
தென் திசை மருங்கின் வெள்ளி ஓடினும்,
வயல்அகம் நிறையப், புதற்பூ மலர,
மனைத்தலை மகவை ஈன்ற அமர்க்கண்
ஆமா நெடு நிறை நன்புல் ஆரக்,
வரி பொருள்
தீய கோள்நிலைகள் தோன்றினாலும், பாரியின் ஆட்சியில் வயல்கள் நிறைந்து விளைந்தன; புதர்களில் பூக்கள் மலர்ந்தன; குட்டிகளை ஈன்ற மாடுகளின் நிரைகள் நல்ல புல்லை நிறைவாக மேய்ந்தன என்று நாட்டின் வளம் கூறப்படுகிறது.
நறுவீ வாசிப்பு விளக்கம் · மறுஆய்வுக்கு உட்பட்டது