தீநீர்ப் பெருங் குண்டு சுனைப் பூத்த குவளைக்
கூம்பவிழ் முழுநெறி புரள்வரும் அல்குல்,
ஏந்தெழில் மழைக் கண், இன் நகை, மகளிர்
புன் மூசு கவலைய முள் முடை வேலிப்,
பஞ்சி முன்றில், சிற்றில் ஆங்கண்,
பீரை நாறிய சுரை இவர் மருங்கின்,
ஈத்திலைக் குப்பை ஏறி உமணர்
உப்பு ஓய் ஒழுகை எண்ணுப மாதோ;
நோகோ யானே; தேய்கமா காலை!
வரி பொருள்
பாரி இருந்த காலத்தில் பகைவேந்தரின் போர்க்குதிரைகளை எண்ணிய பறம்பு மகளிர், இப்போது ஈத்திலைக் குப்பையில் ஏறி உமணரின் உப்பு வண்டிகளை எண்ணுகின்றனர். அந்த வீழ்ச்சியைக் கண்டு கபிலர் தம் வாழ்நாள் தேயட்டும் எனத் துயருறுகிறார்.
நறுவீ வாசிப்பு விளக்கம் · மறுஆய்வுக்கு உட்பட்டது