அளிதோ தானே, பாரியது பறம்பே!
நளி கொள் முரசின் மூவிரும் முற்றினும்,
உழவர் உழாதன நான்கு பயன் உடைத்தே
வரி பொருள்
மூவேந்தரும் சேர்ந்து முற்றுகையிட்டாலும் பாரியின் பறம்பை வெல்வது அரிது; உழவர் உழாமலேயே வாழ்விற்கு வேண்டிய நான்கு இயற்கைப் பயன்களை வழங்கும் தன்னிறைவு கொண்ட நாடு அது என்று கபிலர் கூறுகிறார்.
நறுவீ வாசிப்பு விளக்கம் · மறுஆய்வுக்கு உட்பட்டது