நல்லவும் தீயவும் அல்ல குவி இணர்ப்
புல்லிலை எருக்கம் ஆயினும், உடையவை
கடவுள் பேணேம் என்னா;
வரி பொருள்
நல்ல பூ என்றும் தீய பூ என்றும் வகைப்படுத்தப்படாத, புல்லிய இலையுடைய எருக்கம்பூவாக இருந்தாலும், வழிபடுவோர் தம்மிடம் உள்ளதை அளித்தால் தெய்வம் அதை வேண்டாம் என்று மறுப்பதில்லை என்கிறார் கபிலர்.
நறுவீ வாசிப்பு விளக்கம் · மறுஆய்வுக்கு உட்பட்டது