ஒருதலைப் பதலை தூங்க, ஒருதலைத்
தூம்புஅகச் சிறுமுழாத் தூங்கத் தூக்கிக்,
‘கவிழ்ந்த மண்டை மலர்க்குநர் யார்?’ எனச்
சுரன்முதல் இருந்த சில்வளை விறலி!
வரி பொருள்
ஒருபுறம் பதலையும் மறுபுறம் சிறுமுழாவையும் காவடிபோல் சுமந்து, உணவிடுவோர் இல்லாமல் கவிழ்ந்த தன் உண்கலத்தை நிரப்புவார் யார் என்று வறுமையால் ஏங்கிக் காட்டுவழியில் தங்கிய விறலியை ஔவையார் காண்கிறார்.
நறுவீ வாசிப்பு விளக்கம் · மறுஆய்வுக்கு உட்பட்டது