அமரர்ப் பேணியும், ஆவுதி அருத்தியும்,
அரும்பெறல் மரபின் கரும்பு இவண் தந்தும்,
நீர்அக இருக்கை ஆழி சூட்டிய
தொன்னிலை மரபின் நின் முன்னோர் போல,
வரி பொருள்
தேவர்களைப் போற்றி வேள்வி செய்து, பெறுதற்கரிய கரும்பை இவ்வுலகிற்கு கொண்டு வந்ததாகக் கூறப்படும் தொன்மையான அதியர் மரபினரைப் போல நீயும் உயர்ந்த குடிமரபைச் சேர்ந்தவன் என்று ஔவையார் தொடங்குகிறார்.
நறுவீ வாசிப்பு விளக்கம் · மறுஆய்வுக்கு உட்பட்டது