அடிபுனை தொடுகழல், மையணல் காளைக்குஎன்
தொடிகழித் திடுதல்யான் யாய்அஞ் சுவலே;
வரி பொருள்
வீரக்கழல் அணிந்த, மைபோன்ற தாடியுடைய இளைய பெருநற்கிள்ளியின் மீதுள்ள காதலால் உடல் மெலிந்து என் கைவளைகள் கழல்வதை என் தாய் அறிந்துவிடுவாளோ என்று நான் அஞ்சுகிறேன் என நக்கண்ணையார் கூறுகிறார்.
நறுவீ வாசிப்பு விளக்கம் · மறுஆய்வுக்கு உட்பட்டது