சாறுதலைக் கொண்டெனப், பெண்ணீற்றுற்றெனப்
பட்ட மாரி ஞான்ற ஞாயிற்றுக்,
கட்டில் நிணக்கும் இழிசினன் கையது
போழ்தூண்டு ஊசியின் விரைந்தன்று மாதோ;
வரி பொருள்
ஊரில் விழா தொடங்கியதால் அங்கே உதவச் செல்லவும், மனைவி மகப்பேற்றுவலியில் இருப்பதால் அவளிடம் விரையவும் வேண்டிய ஒருவன், மழை பெய்து சூரியனும் மறையும் நேரத்தில் கட்டிலைப் பின்னும்போது, அவன் கையில் வாரைச் செலுத்தும் ஊசி எவ்வளவு வேகமாக இயங்குமோ, அதைவிடும் அளவுக்கு விரைவாகப் பெருநற்கிள்ளியின் போர் நிகழ்ந்தது எனப் புலவர் வியக்கிறார்.
நறுவீ வாசிப்பு விளக்கம் · மறுஆய்வுக்கு உட்பட்டது