ஒருவனை ஒருவன் அடுதலும், தொலைதலும்,
புதுவது அன்று; இவ் உலகத்து இயற்கை;
இன்றின் ஊங்கோ கேளலம்;
வரி பொருள்
ஒருவன் மற்றொருவனைப் போரில் வெல்வதும், ஒருவன் மற்றொருவனால் தோல்வியுறுவதும் உலகில் தொன்றுதொட்டு நிகழும் இயல்பே; ஆனால் இன்று நடந்ததுபோன்ற ஒன்றை இதற்கு முன் கேட்டதில்லை என்று இடைக்குன்றூர் கிழார் வியப்புடன் தொடங்குகிறார். ஔவை உரையும் இங்கு ‘அடுதல்’ என்பதை வெல்லுதல்/கொல்லுதல் என்றும் ‘தொலைதல்’ என்பதை தோல்வியுறுதல் என்றும் விளக்குகிறது.
நறுவீ வாசிப்பு விளக்கம் · மறுஆய்வுக்கு உட்பட்டது