நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி,
வளிதொழில் ஆண்ட உரவோன் மருக!
களி இயல் யானைக் கரிகால் வளவ!
வரி பொருள்
செறிந்த பெருங்கடலில் மரக்கலங்களைச் செலுத்திக் காற்றின் இயல்பைப் பயன்படுத்திய வலிமைமிக்க முன்னோனின் மரபில் வந்தவனே என்றும், மதம் பொருந்திய யானைகளை உடைய கரிகால் வளவனே என்றும் புலவர் கரிகாலனை விளிக்கிறார். ஔவை உரை, ‘வளிதொழில் ஆண்ட’ என்பதற்கு காற்றை ஏவிக் கலம் செலுத்திய வலியோன் மரபு என விளக்குகிறது.
நறுவீ வாசிப்பு விளக்கம் · மறுஆய்வுக்கு உட்பட்டது