முந்நீர் நாப்பட் டிமிற்சுடர் போலச்
செம்மீ னிமைக்கு மாக விசும்பின்
உச்சி நின்ற வுவவுமதி கண்டு
கட்சி மஞ்ஞையிற் சுரமுதல் சேர்ந்த
சில்வளை விறலியும் யானும் வல்விரைந்து
தொழுதன மல்லமோ பலவே
வரி பொருள்
கடல்நடுவே படகின் விளக்கைப் போல விண்மீன்கள் மின்னும் வானத்தில் முழுமதியைக் கண்ட புலவரும் விறலியும், அதை மன்னனின் வெண்கொற்றக் குடை என நினைந்து விரைந்து பலமுறை தொழுகின்றனர்.
நறுவீ வாசிப்பு விளக்கம் · மறுஆய்வுக்கு உட்பட்டது