வல்லா ராயினும் வல்லுந ராயினும்
புகழ்த லுற்றோர்க்கு மாயோ னன்ன
உரைசால் சிறப்பிற் புகழ்சான் மாற
நின்னொன்று கூறுவ துடையே னென்னெனின்
வரி பொருள்
கற்றவராயினும் பிறராயினும் புகழ முனைவோர்க்கு திருமாலைப் போன்ற சிறப்புடைய மாறனிடம் ஒரு அறிவுரையைச் சொல்லப் புலவர் தொடங்குகிறார்.
நறுவீ வாசிப்பு விளக்கம் · மறுஆய்வுக்கு உட்பட்டது