ஓங்குமலைப் பெருவிற் பாம்புஞாண் கொளீஇ
ஒருகணை கொண்டு மூவெயி லுடற்றிப்
பெருவிற லமரர்க்கு வென்றி தந்த
கறைமிடற் றண்ணல் காமர் சென்னிப்
பிறைநுதல் விளங்கு மொருகண் போல
வேந்துமேம் பட்டபூந்தார் மாற
வரி பொருள்
முப்புரங்களை அழித்த சிவனின் நெற்றிக்கண் தனித்துச் சிறப்பது போல, மாறன் மற்ற வேந்தர்களுள் மேம்பட்டவன் என உயர்த்திப் புகழ்கிறார்.
நறுவீ வாசிப்பு விளக்கம் · மறுஆய்வுக்கு உட்பட்டது