இரும்பிடித் தொழுதியடு பெருங்கயம் படியா,
நெல்லுடைக் கவளமொடு நெய்ம்மிதி பெறாஅ,
திருந்தரை நோன்வெளில் வருந்த ஒற்றி,
நிலமிசைப் புரளும் கைய, வெய்துயிர்த்து,
அலமரல் யானை உருமென முழங்கவும்,
வரி பொருள்
முற்றுகையால் யானைகளுக்குக் குளிப்பும் உணவும் கிடைக்காமல் கட்டப்பட்ட நிலையில் துன்புற்று முழங்குகின்றன; போரின் முடக்கம் உயிரினங்களிலும் தெரிகிறது.
நறுவீ வாசிப்பு விளக்கம் · மறுஆய்வுக்கு உட்பட்டது